
நடிகர் சிவ கார்த்திகேயனின் திருச்சி பங்களாவில் தோட்டக்காரராக பணியாற்றிய ஆறுமுகம் என்பவர் வீட்டின் அருகில் உள்ள கல்குவாரியில் பிணமாக கிடந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவ கார்த்திகேயன், பின்னர் படிப்படியாக வளர்ந்து திரைத் துறையில் கதாநாயகனாக உருவெடுத்தார்.தொடர்ந்து அவரது படங்கள் வெற்றியடையவே தற்போது அசைக்க முடியாத திரை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் திருச்சி வீட்டில் ஆறுமுகம் என்பவர் தோட்டக்காரராக பணியாற்றி வந்தார். அவர் இன்று காலை திடீரென வீட்டின் அருகில் உள்ள கல் குவாரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.,