போதை மாத்திரை கொடுத்து  என்ஜினியர் தம்பதி கடத்தல்… யோகா பெண் பயிற்சியாளர் கணவருடன் கைது…

Asianet News Tamil  
Published : Jul 09, 2017, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
போதை மாத்திரை கொடுத்து  என்ஜினியர் தம்பதி கடத்தல்… யோகா பெண் பயிற்சியாளர் கணவருடன் கைது…

சுருக்கம்

engineering husband and wife kidnabed by yoga teacher

யோகா கற்றுக் கொள்ள வந்த மென்பொறியாளர் தம்பதியை கடத்தியதாக, பிரபல தொலைகாட்சியின் யோகா ஆசிரியை கணவருடன் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் யோகா குறித்த நிகழ்ச்சி ஒன்னைறை நடத்தி வருபவர் உஷா ஸ்ரீநம்மி. இவர் தனது  கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டியுடன் சேர்ந்து தெலுங்கானா மாநிலம் சைபராபாத்தில் ஸ்சுயர் என்ற யோகா பயிற்சி மையத்தையும் நடத்திவருகிறார்.

இவர்களிடம் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜெகதீஷ்கண்டி – கிரண்கண்டி என்ற தம்பதியர் யோகா பயின்று வந்தனர். இவர்கள் இருவருக்கும் போதை மாத்திரைகளை கொடுத்து அடிமைகளாக்கி வைத்திருந்தார் உஷா ஸ்ரீ .

மென் பொறியாளர் தம்பதிகளிடம்  அதிக அளவு பணம் இருப்பதை அறிந்த உஷா ஸ்ரீ நம்மி பணம் பறிக்க திட்டமிட்டார். இதையடுத்த  யோகா ஆசிரியர்களான உஷா ஸ்ரீ நம்மி  தம்பதி, ஜெகதீஷ்கண்டி – கிரண்கண்டி  ஆகியோருக்கு அளவுக்கு அதிகமாக போ மாத்திரைகளை கொடுத்து மயங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பென்பொறியாளர்கள் இருவரும் யோகா மையத்துக்கு சென்ற நிலையில் மாயமானதாக உறவினர்களால் மாதம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

யோகா ஆசிரியை உஷாஸ்ரீ நம்மியை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில் அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டியின் முக நூல் லொக்கேசன் திருவண்ணாமலையை சுட்டிக்காட்டி உள்ளது.

உடனடியாக தெலுங்கானா காவல்துறையினர் இந்த கடத்தல் சம்பவம் குறித்து தமிழக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் சுற்றித்திரிந்த உஷா ஸ்ரீ நம்மியை கணவருடன் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த  காரில் போதை மயக்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெகதீஷ்கண்டி தம்பதியை மீட்டனர்.

மயக்கத்தில் இருந்த மென்பொறியாளர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 சவரன்நகை மற்றும் ஐ போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தெரியவந்ததை யடுத்து, யோகா ஆசிரியை உஷாஸ்ரீநம்மியிடம் இருந்து அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து திருவண்ணாமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!