பெட்ரோல் பங்க் ஸ்ட்ரைக் வாபஸ்…12 ஆம் தேதி வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு…

Asianet News Tamil  
Published : Jul 09, 2017, 05:32 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
பெட்ரோல் பங்க் ஸ்ட்ரைக் வாபஸ்…12 ஆம் தேதி வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு…

சுருக்கம்

petrol bunk strike vapaus

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வரும்  12-ந்தேதி வழக்கம்போல் திறந்திருக்கும் என்று பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல்-டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வந்தன.

இதையடுத்து  பெட்ரோல்-டீசல் விலையை நாள்தோறும்  மாற்றியமைக்கும் முறை கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கும் விலைக்கு ஏற்ப தற்போது பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயம் செய்வதால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதாக கூறி ஜூலை 12-ந் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும், அகில இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், அகில இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழ்நாடு பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் பங்கேற்கப்போவதில்லை என்றும், அன்று  தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்களின் கோரிக்கைகளை, மத்திய அமைச்சர் ஏற்றுக்கொள்ளும் சூழல் இருப்பதாக எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!