அக்டோபரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்? - தேர்தல் ஆணையம் விளக்கம்.!!!

First Published Jul 9, 2017, 9:39 AM IST
Highlights
EC explains about RK nagar election


வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்து ரத்து செய்யப்பட்ட சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என  தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் முன்னாள் முதமைச்சர் முப்தி முகமது சையது மரணமடைந்ததையடுத்து , அனந்த்நாக் தொகுதி எம்பியாக இருந்த அவரது மகள் மெகபூபா முப்தி முதலமைச்சரானார்.

இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் அனந்த்நாக் மற்றும்  ஸ்ரீ நகர்  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

 வன்முறை சம்பவங்கள் காரணமாக ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த அனந்த்நாக் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு 2 முறை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி  ஒருவர், கூறுகையில், ’அனந்த்நாக் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் பாதுகாப்பு நிலவரங்கள் சீராகவில்லை. 

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால்  தேர்தலை அக்டோபரில் நடத்தலாமா என தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது என தெரிவித்தார்.

இதே கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்ட  சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலும்  அக்டோபர் மாதம் நடக்க  வாய்ப்பிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

click me!