சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் பங்கேற்கும் சிவகங்கை வீரர்கள்; இருவருக்கும் வயசு 70-க்கு மேல…

 
Published : Sep 18, 2017, 07:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் பங்கேற்கும் சிவகங்கை வீரர்கள்; இருவருக்கும் வயசு 70-க்கு மேல…

சுருக்கம்

Sivagangai players participating in Asian competitions in China ...

சிவகங்கை

சீனாவில் நடைபெறும் ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் பங்கேற்க சிவகங்கையைச் சேர்ந்த இருவர் தேர்வாகிவுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகள் சீனாவில் வருகிற 24–ஆம் தேதி தொடங்கி 28–ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஐதராபாத்தில் தேசிய அளவில் போட்டிகள் வைத்து அதில் வெற்றிப் பெற்று சாதனைப் படைத்தவர்களை ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய தடகள போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 27 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் இருவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அதில், ஒருவர் காரைக்குடியை அடுத்த ஸ்ரீராம்நகரைச் சேர்ந்த பொசலான் (73). இவர் 70 முதல் 75 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில் மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதல், 80 மீ. தடை தாண்டுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறார்.

பொசலான், ஏற்கனவே தேசிய, ஆசிய, சர்வதேசப் போட்டிகளில் பலமுறை பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

மற்றொரு வீரர் திருப்பத்தூர் அருகே உள்ள கொடுங்குன்றம், செல்லையம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் (78). இவர் 75 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் 800 மீ, 1500 மீ, 5000 மீ, ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கிறார்.

கோவிந்தன் தேசிய அளவிலான போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர்.

இவர்கள் இருவரும் சீனாவில் நடைபெறும் ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை குவிக்க வேண்டும் என்பது அவர்கள் ஊரில் உள்ள அனைவரின் கனவாகும்.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!
எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது