திருப்பதியில் இன்று பிரம்மோற்சவம்... 427 பெருமாள் திருமுருகங்களுடன் காஞ்சி பட்டுசேலை அனுப்பிவைப்பு!!

By Narendran SFirst Published Sep 27, 2022, 4:25 PM IST
Highlights

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்திற்காக 8 நாட்கள் விரதம் இருந்து இரவு பகல் பாராமல் காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் 427 பெருமாள் முகங்களுடன் கூடிய பட்டுசேலையை நெசவு செய்து அசத்தியுள்ளனர். 

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்திற்காக 8 நாட்கள் விரதம் இருந்து இரவு பகல் பாராமல் காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் 427 பெருமாள் முகங்களுடன் கூடிய பட்டுசேலையை நெசவு செய்து அசத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் பட்டுசேலை வழங்குவது வழக்கம். அந்த வகையில் 427 பெருமாளின் திருமுருகங்களும் 27 ஜோடி யானைகள் உருவமும், ஆதிசேஷன் மீது அரங்கநாதரும் மகாலட்சுமியும் அமர்ந்திருப்பது போல் உருவம் பதித்த பட்டுசேலை ஒன்றை காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் விரதம் இருந்து நெசவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தனியார் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து: 8 மணி நேரம் போராடிய வீரர்கள்

காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர்கள் குமரவேலு கலையரசி தம்பதியினர். பட்டுச்சேலை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து தயாரித்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 3 ஆவது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாக பட்டுச்சேலை தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: சென்னை அண்ணாநகரில் குமரி ஆனந்தனுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் ..! ஏன் தெரியுமா..?

வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் முகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் லட்சுமி தேவியை வடிவமைத்து தர டிசைனர் தம்பதியினர் முடிவெடுத்தனர். அதன்படி குமரவேலு கலையரசி  தம்பதியினர் பெருமாளின் திருமுகம், அரங்கநாதர் லட்சுமி தேவியின் படத்தினை வடிவமைத்து இரவு பகலாக கடந்த எட்டு தினங்களாக நான்கு நெசவாளர்கள் துணையுடன் 192 மணி நேரத்தில் பட்டுச்சேலையை நெசவு செய்து தயாரித்து உள்ளனர். இந்த பட்டுசேலை திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

click me!