
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அரசு கல்லூரிக்கு பக்கத்தில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதியில் அரசு கல்லூரி, செயற்கை புல்வெளி வலைகோல் பந்தாட்ட (ஹாக்கி) மைதானம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன.
எனவே, டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, மாநில குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள், உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சூர்யகலாவிடம் கோரிக்கை மனு வழங்கிவிட்டு தாமாகவே அங்கிருந்து கலைந்துச் சென்றுவிட்டனர்.