புதிய ரேஷன் கார்டு வேணுமா ? அரசு இ-சேவை மையங்களுக்குப் போங்க….

First Published Apr 22, 2017, 8:34 AM IST
Highlights
New Ration card


அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதிய ரேஷன் கார்டு பெறவும், ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுகளில் மாற்றங்கள் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்பொழுது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ–சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சேவை மையங்கள்  மூலம், கூடுதலான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டி அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நானை மறுநாள் முதல் அரசு இ–சேவை மையங்கள் வாயிலாக புதியதாக ரே‌ஷன் கார்டு பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் நீக்கம், செல்போன் எண் மாற்றம் செய்தல் போன்ற ரே‌ஷன் கார்டு தொடர்பான சேவைகள், வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரே‌ஷன் கார்டு தொடர்பான  சேவைகள் பெற்றிட பொதுமக்கள் தங்களது இல்லங்களுக்கு அருகாமையில் உள்ள இ–சேவை மையங்களை அணுகி பயன்பெறுமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

tags
click me!