
திருவாரூர்
திருவாரூரில் டாஸ்மாக் சாராயக் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 இலட்சம் மதிப்புள்ள சாராய பாட்டில்களை அபேஸ் செய்த மர்ம நபர்களை காவலாளர்கள் வெகு தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று உள்ளது. நேற்று காலை அந்த வழியாகச் சென்ற மக்கள் டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் திருவாரூர் காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இந்த தகவல் அறிந்தத காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனே விசாரணையைத் தொடங்கினர்.
அந்த விசாரணையில் இரவு டாஸ்மாக் சாராயக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே 86 பெட்டிகளில் இருந்த சாராய பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.6 இலட்சம் இருக்கும்.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவலாளர்கள் வழக்குப்பதிந்து சாராய பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை வெகு தீவிரமாக தேடி வருகின்றனர்.