TN Rains : மக்களே உஷார் !! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை அடிச்சு ஊத்தப்போகுது.!

Published : May 22, 2022, 09:09 AM IST
TN Rains : மக்களே உஷார் !! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை அடிச்சு ஊத்தப்போகுது.!

சுருக்கம்

Tamilnadu Rains : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இன்று முதல் மே 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும்,வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்,அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதே சமயம்,வடக்கு கேரளா தெற்கு கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.குறிப்பாக,மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதி மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

இதையும் படிங்க : Petrol Price : அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.! எவ்வளவு தெரியுமா ?

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்