தமிழகத்தில் அதிகரித்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 46 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

By Thanalakshmi V  |  First Published May 21, 2022, 8:58 PM IST

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 46 ஆக அதிகரித்துள்ளது.
 


கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 46 ஆக குறைந்துள்ளது. 

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 321 ஆக உள்ளது.  கொரோனா தொற்றிலிருந்து மேலும் 40 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,501 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,339 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TN Corona: தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா… 44 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

click me!