அலர்ட்.. டிஎன்பிஎஸ்இ குரூப் 2,2ஏ தேர்வு.. 1.83 லட்சம் பேர் எழுதவில்லை. வெளியான அதிர்ச்சி தகவல்..

By Thanalakshmi VFirst Published May 21, 2022, 5:21 PM IST
Highlights

இன்று நடைப்பெற்ற குரூப் 2, 2 ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என்று டிஎன்பிஎஸ்இ தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
 

இன்று நடைப்பெற்ற குரூப் 2, 2 ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என்று டிஎன்பிஎஸ்இ தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் குரூப் 2, 2ஏ பிரிவுகளில் காலியாகவுள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது.  இன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை 117 மையங்களில் தேர்வு நடைபெற்றது.இன்று நடைபெற்று தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறமால் இருக்க, 4 ஆயிரத்து 12 பேர் முதன்மை கண்காணிப்பாளராகவும் 58 ஆயிரத்து 900 பேர் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: ”பெரியார் சொன்னார்”.. இது தான் திராவிட மாடல் ஆட்சி.. மார்த்தட்டும் ஸ்டாலின்..

இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்விற்கு 11.78 பேர் ஹால் டிக்கேட் பதவிறக்கம் செய்த நிலையில் 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்இ தேர்வினை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என்றும் அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: உடையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி.! கே.எஸ் அழகிரி தடாலடி பேட்டி.!

click me!