கவனத்திற்கு.. மாணவர்களுக்கு இலவச spoken English பயிற்சி.. எந்தெந்த வகுப்பு வரை.. ? அரசு வெளியிட்ட அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published May 21, 2022, 6:18 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் இந்த பயிற்சி வழங்கும் ஆசியர்களை மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்வு செய்யவேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அரை மணி நேரம் ஆன்லைனில் தேர்வு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் படிக்க:Schools Reopen : தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு - எப்போது தெரியுமா..?

இதுக்குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” அரசு பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு spoken English பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி வழங்க ஆங்கிலப் புலமை வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்கிறது. ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கில புலமையை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க: அலர்ட்.. டிஎன்பிஎஸ்இ குரூப் 2,2ஏ தேர்வு.. 1.83 லட்சம் பேர் எழுதவில்லை. வெளியான அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கிலப் புலமை உடையவர்கள் அடையாளம் காண கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான ஆசிரியர்களுக்கு வருகின்ற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட வாறு அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் spoken English பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறக்க செல்கிறார் முதலமைச்சர்..சேலத்தில் ஓராண்டு சாதனை கூட்டம்.. வெளியான தகவல்

click me!