ஆங்கிலத்தில் பெயர் பலகை? 1 மாதம் கெடு விதித்து ராமதாஸ் எச்சரிக்கை

Published : Feb 28, 2023, 11:09 PM IST
ஆங்கிலத்தில் பெயர் பலகை? 1 மாதம் கெடு விதித்து ராமதாஸ் எச்சரிக்கை

சுருக்கம்

வணிக வளாகங்களில் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்திருப்பவர்கள் அதனை 1 மாதத்திற்குள் மாற்றி தமிழில் வைக்கவேண்டும், இல்லையென்றால் அவை கருப்பு மை கொண்டு அழிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழை தேடி பரப்புரை பயணத்தின் எட்டாம் நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் கோ க மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது என தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

பெயர் பலகைகளில் ஐந்து பங்கு தமிழ் மொழியிலும் மூன்று பங்கு ஆங்கில மொழியிலும் இரண்டு பங்கு அந்த வணிகர் எதை விரும்புகிறாரோ அந்த மொழியிலும் வைக்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின் படி யாரும் பெயர் பலகை வைக்கவில்லை. மொழி அழிந்தால்  தமிழ் இனமே அழிந்து போகும் நானும் தமிழில் தான் படித்தேன். பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன் . 

102 தமிழ் அறிஞர்கள் வள்ளுவர் கோட்டத்தில் உள்ளே உண்ணா நிலை மேற்கொண்டார்கள் நாங்கள் உயிரை தருகிறோம் தமிழை தாருங்கள் என்றனர். சட்டங்கள் அரசு போட்டாலும் இந்த சட்டங்களை இந்த பள்ளிகள் மதிப்பதில்லை மதிக்காமல் நீதிமன்றம் செல்கின்றனர். கல்வியை வணிகம் செய்யும் நிறுவனங்கள் அரசு சட்டங்களை மதிக்காமல் கூட்டணி அமைத்து தமிழை அழிக்கவே நினைத்து நீதிமன்றம் செல்கின்றது.

அரசு கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு

தமிழகத்தில் 75 சதவீதம்  ஆங்கிலேயர்களாக வாழ்கின்றனர் போல அதுபோன்ற பெயர்களை தான் வைத்து உள்ளனர். தமிழ் பெயர் 5 சதவீதம்  தான் உள்ளதை பார்த்தால் அந்த 5 சதவீதம் தான் வாழ்கின்றனர். கருப்பு மைய்யுடன் ஒரு திங்கள் கழித்து வருவோம் அப்போது இந்த கலவை மொழி பெயர் பலகைகளை அவர்களே மாற்றிவிடுவார்கள் என நினைக்கிறேன் என்றார்.

துண்டு பிரசுரம் விநியோகித்த பெண்களின் ஆடையை பிடித்து இழுத்த பாஜகவினரால் பரபரப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!