மதுரையில் 11 வயது சிறுமி கொலை.. சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி திருப்பம் - என்ன நடந்தது?

By Ansgar R  |  First Published Mar 22, 2024, 7:15 PM IST

Madurai : இன்னும் புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் இருந்தே மக்கள் மீளாத நிலையில், மதுரையில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் ஒரு சம்பவம் நடந்தது. சிறுமி ஒருவர் தனது வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், சில தினங்களுக்கு பிறகு முட்டையில் கட்டப்பட்ட அவரது உடல் சாக்கடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனையில், அந்த சிறுமி பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாகியுள்ளார் என்கின்ற தகவலும் கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்தக் கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டரீதியாக அவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர். ஆனால் இன்னும் அந்த நிகழ்வே மக்களின் மனதில் இருந்து நீங்காத நிலையில், மதுரையில் 11 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து தற்பொழுது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தண்ணீர் கேட்ட உணவு டெலிவரி பாய்! கிச்சனுக்கு சென்ற பெண் என்ஜினீயர் அலறல்! நடந்தது என்ன?

மதுரை கூடல் புதூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் கழிவறையில் மர்மமான முறையில் மயங்கி கிடந்துள்ளார். சிறுமியை காணாமல் தேடிய அவருடைய உறவினர்கள், இறுதியில் அவர் கழிவறையில் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ந்து, உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்கு எடுத்து சென்றுள்ளனர். 

ஆனால் அங்கு தான சிறுமி ஏற்கனவே இறந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த சூழலில் சிறுமியின் இந்த மரணம் சந்தேக வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அச்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி, பிரேத பரிசோதனை நடைபெற்றது. 

அதன் முடிவுகள் தற்பொழுது வெளியான நிலையில் அதிர்ச்சி தரும் வகையில், அந்த 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தான் உயிரிழந்திருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. கைரேகை நிபுணர்களை வைத்து தற்பொழுது போலீசார் தேடுதல் வேட்டியை நடத்தி வரும் நிலையில் விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என்று மாவட்ட காவல் ஆய்வாளர் உறுதி அளித்திருக்கிறார். மேலும் சந்தேக வழக்காக இருந்த சிறுமியின் வழக்கு தற்பொழுது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் பாலியல் தொந்திரவு கொடுத்த கராத்தே மாஸ்டரின் கழுத்தை நெரித்து கிணற்றில் வீசிய தம்பதிகள்!!

click me!