விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் 4 ஆண்டுகளாக இருந்த பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் 4 ஆண்டுகளாக இருந்த பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் குண்டல புலியூர் கிராமத்தில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது. இங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் பலர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த தனது மாமாவை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சலீம்கான் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அப்போது, ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் சட்டவிரோதமாக நடந்து வந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்
undefined
இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வந்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து, ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையர் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதை அடுத்து அனுமதியின்றி ஆசிரமம் நடத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆஸ்ரமவாசிகளை வெளிமாநிலத்திற்கு கடத்தியது, மனநலம் குன்றியோர், ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோத்தகிரியில் பள்ளி அருகே உலா வந்த கரடியால் பரபரப்பு!
இதனிடையே ஆசிரமத்தில் 4 ஆண்டுகளாக இருந்த பெண்மணி ஒருவர் தற்பொது அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், கொடுமை தாங்க முடியாமல் 4 ஆண்டுகளில் 2 முறை ஆசிரமத்தில் இருந்து தப்பித்தேன். வயதானவர்களை அடித்து பணம் மற்றும் நகைகளை நிர்வாகிகள் பறித்துக்கொண்டார்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 2 பெண்களும் என்னிடம் கதறி அழுதுள்ளனர். புதிதாக வரும் இளம்பெண்களை இது போன்று செய்துள்ளனர். எதற்கெடுதாலும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள், அடிப்பார்கள், சங்கிலியால் கட்டி வைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.