16வருட சிறைவாசத்திற்கு பின் மறுவாழ்வு பெற தள்ளுவண்டிக்கு உதவி கேட்ட நபருக்கு உணவகம் அமைத்து கொடுத்த மருத்துவர், தன்னார்வலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன். இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 16 வருடங்களுக்கு முன் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது ஈஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட அடிதடி மோதலில் லோகேந்திரன் தள்ளிவிட்டதில் ஈஸ்வரன் உயிரிழந்தார்.
இதனையடுத்து லோகேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். இதில் லோகேந்திரனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. கணவன் சிறையில் அடைக்கபட்டதால் வசந்தா கை குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு குழந்தைகளை வளர்த்து வந்தார்.
undefined
இந்த நிலையில் 16 ஆண்டுகள் சிறை வாழ்க்கை முடிந்து வெளியே வந்த லோகேந்திரன் அடுத்தது தனது வாழ்க்கையை எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் சிறை சென்றவர் என கூறி புறக்கனிப்பார்களே என நினைத்து கவலைபட்டு பல நபர்களிடம் உதவி கேட்டு அனுகியுள்ளார். அப்படி நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள மருத்துவர் மகேஸ்வரன் என்பவரை சந்தித்து உதவி கேட்டுள்ளார்.
2026ல் பாமக தலைமையில் கூட்டணி - அன்புமணி பேட்டி
தனது குடும்ப நிலை, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றை கூறி பிழைப்பிற்காக லோகேந்திரன் தள்ளு வண்டி கடை ஒன்று வைக்க உதவி கேட்டுள்ளார். அவரது சூழ்நிலையை என்னியும் கொலை குற்றவாளியாக இருந்தும் மறு வாழ்வு பெற உழைக்க என்னும் அவரது நல்ல குணங்களை புரிந்து அந்த மருத்துவர் லோகேந்திரனுக்கு சில தன்னார்வலர்களின் உதவியுடன் சிறிய உணவகம் ஒன்றினையே வைத்து கொடுத்துள்ளார்.
ஆங்கிலத்தில் பெயர் பலகை? 1 மாதம் கெடு விதித்து ராமதாஸ் எச்சரிக்கை
மேட்டுப்பாளையத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் அதற்காக இடத்தை தேர்வு செய்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்து உணவகம், தேநீரகம் என சகல வசதிகளுடன் கூடிய உணவகம் வைத்து கொடுத்துள்ளார். இன்று அந்த கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவர் மகேஸ்வரன் மற்றும் லோகேஸ்வரன் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.