ஷங்கர் சார் நீங்க இப்படி பண்ணலாமா? கொன்று குவித்ததற்கு கண்டுக்காம இப்படி சிஎஸ்கே மேட்ச் வின் பண்ணதுக்கு பாராட்டா?

 
Published : May 23, 2018, 11:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
ஷங்கர் சார் நீங்க இப்படி பண்ணலாமா? கொன்று குவித்ததற்கு கண்டுக்காம இப்படி சிஎஸ்கே மேட்ச் வின் பண்ணதுக்கு பாராட்டா?

சுருக்கம்

Shankar sir do you do this Do not forget to killing of the CSK

ஸ்டெர்லைட் பிரச்சினையால் தூத்துக்குடியே கலவர பூமியாக காட்சியளிக்கும் இந்த சூழலில், சிஎஸ்கே அணியைப் புகழ்ந்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் டிவிட் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வன், இந்தியன், எந்திரன் உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஷங்கர். தற்போது ரஜினியை வைத்து இயக்கிய  “2.0” படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்க இருக்கிறார்.

இந்நிலையில், நேற்றிரவு சிஎஸ்கே கிரிக்கெட் அணியைப் பாராட்டி அவர் தனது டிவிட்டரில், “சிஎஸ்கே - தி அவெஞ்சர்ஸ்.. புல் ஆப் ஹீரோஸ்... வாட் எ மேட்ச்” எனப்  பதிவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் பிரச்சினையால் தூத்துக்குடியே கலவர பூமியாக மாறியுள்ளது. நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் அங்கு 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் இயக்குநர் ஷங்கர் கிரிக்கெட் அணியைப் பாராட்டி டிவிட் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் இந்தப் பதிவிற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்தப் பதிவை  தனது பதிவை அவர் உடனடியாக நீக்கிவிட்டார்.

இதனையடுத்து, இன்று காலை தூத்துக்குடி சம்பவத்திற்கு எதிராக " தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியையும், வலியையும் அளிக்கிறது. தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அடி மனதில் இருந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

கருத்து ஒன்றை பதிவிட்டார்.

ஆனால், அவரை டிவிட்டரில் தொடர்ந்து வருபவர்கள், 'நேற்று கிரிக்கெட் பதிவிற்கு அடி பலமோ, இன்று தூத்துக்குடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளீர்களே', தமிழக அரசின் இந்த செயலையும், போலிசாரின் இந்த வன்முறையும், ஏன் கண்டிக்கவில்லை என ஷங்கருக்கு கண்டனம் வலுத்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!
பைக்கில் வந்த இளைஞர் செய்த செயல் கழுத்தைப் பிடித்து தள்ளிய நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு.