
சேலம் ஓமலூர் அருகே நாரயணம்பாளையத்தில் ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மணிவண்ணன், முருகன் மற்றும் பெருமாள் ஆகிய மூன்று ஓட்டுனர்களை பொதுமக்களே போலீசில் பிடித்து கொடுத்தனர்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பேருந்தில் தனியாக பயணம் செய்யும் பெண்களிடமும் சிருமியரிடமும் தவறாக நடந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதும் அதிகரித்தபடி இருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பேருந்தில் தனியாக பயணம் செய்த கல்லூரி மானைவியை பேருந்து ஓட்டுனரும் நண்பர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவம் நிகழ்ந்தது பொதுமக்களை வெகுவாக பாதித்தது.
ஐந்து வருடம் கழித்து இந்த ஆண்டு தான் அந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது, பல குற்றங்கள் பதிவு செய்யப்பட்டும் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று சேலம் ஓமலூர் அருகே நாரணம்பாலயத்தில் ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 3 ஓட்டுனர்களுக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்களே போலீசில் பிடித்து கொடுத்தனர். மணிவண்ணன், முருகன் மற்றும் பெருமாள் ஆகிய 3 ஓட்டுனர்களை கை செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனையடுத்து இன்று ஊத்தங்கரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 60 வயது முதியவர் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளார்.