
தேனி
தேனி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 18 முதல் 24 வயது பூர்த்தி அடைந்தவர்களாக கணக்கிடப்பட்டவர்களில் 10 ஆயிரம் பேர் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று தேனி மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
அதில், “தேனி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 18 முதல் 24 வயது பூர்த்தி அடைந்தவர்களாக கணக்கிடப்பட்டவர்களில், 10 ஆயிரம் பேர் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
இதனால், இளம் வாக்காளர் சேர்க்கைக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தொழில் நிறுவன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 26 கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 62 வளாக தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட 1177 வாக்குச் சாவடிகளிலும் வரும் ஜூலை 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அளிக்கப்படும் ஆவணப் பதிவின் அடிப்படையில், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியும் நடைபெறும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர்.