
தேனியில் விவசாயித் தோட்டத்தில் கையில் அரிவாளுடன் இரண்டு அடியில் கருப்பணசாமி சாமி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வருவாய்துறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ளது காமன்கல்லூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பொன்னையன் (50). இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் ஒன்று உள்ளது.
அங்கு கடந்த மே 23-ஆம் தேதி பள்ளம் தோண்டியபோது, சுமார் இரண்டு அடி உயரமுள்ள, கையில் அரிவாளுடன் கூடிய கருப்பணசாமி சிலை கிடைத்தது. அதனை பொன்னையன் தனது வீட்டில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் அச்சிலையை அவர் நேற்று மயிலாடும்பாறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
காவல்துறையினர் விசாரணைக்குப் பின் ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் பிரபாகனிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.