
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ரூ.3.40 லட்சம் வழங்கவும் மனித உரிமை சிறப்பு நீதிமன்றம் அதரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம், பொதும்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கியசாமி.
2011 ஆம் ஆண்டு பள்ளியில் படித்த 90-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 24 மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாதர் சங்கமும், ஆரோக்கியசாமி மீது புகார் அளித்ததன் பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த சமூகநீதி, மனித உரிமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முக சுந்தரம், ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் என ரூ. 3.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஆரோக்கியசாமிக்கு நீதிபதி சண்முக சுந்தரம் உத்தரவிட்டார்.