நிலநடுக்கத்தால் 140 கும் மேற்பட்டோர் பலி..! ரிக்டரில் பதிவான 7.1-பெரும் பீதியில் மக்கள் ..!

First Published Sep 20, 2017, 10:13 AM IST
Highlights
severe earthquak in mexsigo


ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவிற்கு பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் மெக்சிகோ நாடே சின்னா பின்னமாக மாறி வருகிறது.

இதற்கு முன்னதாக அமெரிக்காவில் இர்மா புயல் மற்றும் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகமாகி நகரமே தண்ணீரில் தத்தளித்தது .உடன் கடினமான சூறாவளி காற்றால் மரங்கள் முதல் வாகனங்கள் வரை அனைத்தும் பறந்தன. இதனை சரி செய்து முடிக்கும் முன்பே மீண்டும் ஒரு சோக  நிகழ்வு நடந்துள்ளது.

அதாவது மெக்சிகோ  நாட்டில் உள்ள பியூப்லா நகரில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 140க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் பலர்  இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்  என அஞ்சப்படுவதால் மக்கள்  பெரும்  பீதியில் உள்ளனர். அங்குள்ள  மருத்துவமனை  வளாகத்தில் உள்ள  நோயாளிகளை  பாதுகாப்பாக  வேறு இடத்திற்கு மாற்றப் பட்டு உள்ளனர்

மேலும் அலுவலகம் வீடு என  அனைத்து  இடத்திலும்  நிலநடுக்கத்தை  உணர்ந்ததால் மக்கள்  ரோட்டிற்கு  விரைந்தனர். இதனை  தொடர்ந்து  தற்போது  மீட்பு  பணிகள்  விரைந்து நடைபெற்று  வருகின்றன

click me!