
அரியலூர்
சாத்தமங்கலத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலத்தில் விரைவு பேருந்து உள்ளிட்ட அனைத்துப் பேருந்துகளும் நின்றுச் செல்ல வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த மறியல் குறித்து தகவலறிந்த அரியலூர் போக்குவரத்து கிளை மேலாளர் செந்தில்குமார், கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் சுப்பையா மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிகாரிகள் சாத்தமங்கலத்தில் அனைத்து பேருந்துகளும் நின்றுச் செல்லும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இந்த மறியலால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.