
விருதுநகர்
தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் சாத்தூரில் உள்ள எம்.எல்.ஏவின் அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
தமிழகத்தில் 18 சட்டப் பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அதிரடியாக் உத்தரவிடப்பட்டது.
இதில் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியனும் ஒருவர். அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் கோட்டாட்சியர் மங்களராமசுப்பிரமணியன், வட்டாட்சியர் முத்துலட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலையில் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டதோடு காவல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.