
விழுப்புரம்
ரோஹிங்யா முஸ்லிம்களை இனப் படுகொலை செய்வதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹூத் ஜமா அத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரோஹிங்யா முஸ்லிம்களை இனப் படுகொலை செய்வதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹூத் ஜமா அத் சார்பில், கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் விழுப்புரம் மேற்கு மாவட்டத் தலைவர் ஆஜாத் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் ரபிக், துணைத் தலைவர் கைய்யும், துணைச் செயலர்கள் காசிம், சதாம், யாசர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவரணி பக்கீர் முஹம்மத் வரவேற்றார்.
மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் இனப் படுகொலை செய்யப்படுவதையும், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதையும் கண்டித்து குல்சார் பேசினார்.
“மூன்று இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டும், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்ட கொடுமையும் எந்த நாட்டிலும் இதுவரை நடந்ததில்லை.
முஸ்லிம்கள் மீதான இன அழிப்புத் தாக்குதலை உலக நாடுகளும், ஐநா சபையும் தடுத்த நிறுத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.