செந்தில் பாலாஜியை 8 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜரானார். அப்போது பைபாஸ் சர்ஜரி நடக்க உள்ளதால், காவல் வழங்கினால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார்.
BREAKING : இலாகா மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்.. ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எதிர்ப்பு..
ஆனால் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் தற்போது செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை மருத்துவமனையிலேயே விசாரிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இரத்த நாளத்தில் அடைப்புகள் உள்ளதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், அவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பைபாஸ் சர்ஜரி நடக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே செந்தில் பாலாஜியை நேரில் அழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணைக்க்கு பிறகு ஜூன் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு செந்தில் பாலாஜியை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில், 8 நாட்கள் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநருக்கு காத்திருக்க வேண்டியதில்லை; தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை வெளியிடுகிறது?