மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பணம் செந்தில் பாலாஜி..!ஸ்டாலின் பாராட்டு

Published : Sep 17, 2025, 07:30 PM IST
Senthil Balaji

சுருக்கம்

மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாக செந்தில் பாலாஜி திகழ்வதாக கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து தள்ளினார். முப்பெரும் விழாவில் மாநாடு போல் திமுக தொண்டர்கள் திரண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

கரூரில் திமுக முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுவின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பல ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழா நடந்தபோது திடீரென மழை கொட்டியது. ஆனாலும் திமுக தொண்டர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

முப்பெரும் விழாவை மாநாடு போல் நடத்திய செந்தில் பாலாஜி

முப்பெரும் விழாவுக்கு மாநாடு போல் கூட்டம் வந்திருந்ததை கண்டு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பூரிப்படைந்தனர். இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் மாநாடு போல் கூட்டத்தை கூட்டிய முப்பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழந்து தள்ளினார். இது தொடர்பாக பேசிய ஸ்டாலின், ''இந்த ஆண்டு முப்பெரும் விழாவை கரூரில் நடத்த வேண்டும் என அனுமதி கேட்டு அருமை சகோதரர் செந்தில் பாலாஜி என்னிடம் வந்தார். நானும் ஒப்புதல் கொடுத்தேன்.

மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பணம்

ஆனால் பொதுக்கூட்டம் என்று சொல்லி விட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டையே இங்கு ஏற்பாடு செய்துள்ளார் செயல் வீரர் செந்தில் பாலாஜி. நான் கோடு போட சொன்னால் ரோடு போடுவாரு. இங்கு ரோடு போட்டு அந்த ரோட்டின் மேல் தான் நான் வாகனத்தில் வந்தேன். செந்தில் பாலாஜி மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கி வருகிறார். அதனால் தான் அவர் வெளியே இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியாது என்று அவரை முடக்க பார்த்தனர்.

செந்தில் பாலாஜியை முடக்க முடியாது

ஆனால் இவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவார். திமுக வரலாற்றில் இப்படி ஒரு பிரம்மாண்ட முப்பெரும் விழா நடந்து இருக்காது என்று நான் உறுதியாக சொல்வேன். மழை கொட்டினாலும் நீங்கள் அதை பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக் கொண்டு நாற்காலியை தூக்கி தலைமேல் வைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறீகள். அது ஒன்றே சாட்சி. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற வேண்டும் என உழைத்த அருமை சகோதரர் செந்தில் பாலாஜிக்கும், அவருக்கு துணையாக இருந்த நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகள். வாழ்த்துகள்'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!