செந்தில் பாலாஜி மனைவி அளித்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு மற்றும் பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அவருடைய மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு மற்றும் பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று அவர்கள் பிறப்பித்த பொழுது இரு நீதிபதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருந்தனர்.
இதையும் படியுங்கள் : தமிழகத்தில் தொழில்துறையை முடக்கும் திறனற்ற திமுக அரசு - அண்ணாமலை
இதனால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இந்த சூழலில் தான் இந்த வழக்கை வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். தற்போது அவருக்கு கால அவகாசம் தேவைப்படுவதால், நாளை விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அடுத்து தற்பொழுது இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.
செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்ததாக கூறி, அந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : கோவை மாவட்டம்.. செந்தில் பாலாஜி இடத்தில் முத்துசாமி..!