
தேர்தலுக்கு பிறகு நடிகர் விஜய்யின் தவெக இருப்பது சந்தேகம் தான் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''தவெக ஒரு தேர்தலுக்கு பிறகு இருக்குமா? என்பது சந்தேகம் தான். விஜய்ய்யின் உடன் இருப்பவர்கள், விஜய்யின் குணாதிசியம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது அடுத்த தேர்தலுக்கு பிறகு விஜய்யால் நிற்க முடியுமா என்பதில் பெரிய சந்தேகம் உள்ளது. விஜய்யின் ஆசிர்வாதத்துடன் தான் ஆதவ் அர்ஜூனா பொதுக்குழு மேடையில் ஒருமையில் பேசியுள்ளார்.
விஜய்க்கு பிடிக்கவில்லை என்றால் இதை அவர் பேசி இருக்க மாட்டார். எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோ எதாவது கருத்தை சொல்ல வேண்டும் என்றால் நேரடியாக சொல்ல மாட்டர்கள். மற்றவர்களை வைத்து தான் பேச வைப்பார்கள். அந்த பாணியைத் தான் விஜய் கடைபிடிக்கிறார். ஆனால் ஆதவ் அர்ஜூனா பேச்சு விஜய்க்கு நெருக்கடியில் தான் முடியும்.
இப்படி திமுகவை அட்டாக் செய்தால், திமுக, அதிமுக என இருவருமே அதை ரசிக்க மாட்டார்கள். தனிப்பட்ட விஷயங்களை பேசுவது, ஒருமையில் பேசுவது எல்லாம் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. திமுகவை என்றைக்கும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதுவும் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது குறைத்து மதிப்பிடக்கூடாது. இதை விட 100 மடங்கு அவர்கள் பேசுவார்கள்.
செயல் திட்டம் என்ன?
ஆதவ் அர்ஜூனா திமுகவுடன் விஜய்யை அதிகம் மோத விடுகிறார். ஒரு வடிவேல் காமெடி உள்ளதே. அந்த கதை தான். எனக்கு அப்படி தான் தோன்றுகிறது. இதில் கவலைப்பட வேண்டியது விஜய் தான். இந்த பேச்சு திமுகவுக்கு எதிராக விஜய்யை மேலும் நகர்த்தி செல்லும். தேவையில்லாமல் பேசுவதை விட்டு உங்களது கட்சியின் செயல் திட்டம் என்ன? எடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்ன? அதை பற்றி பேசுங்கள்.
பலமான கூட்டணி, பாஜக எதிர்ப்பு வாக்குகள் என பலம்வாய்ந்த திமுகவை வீழ்த்துவது சாதாரண விஷயம் அல்ல. அதிமுகவும், திமுகவும் சேர்ந்து அடிக்கும். அதை தாங்க வேண்டும். விஜய்க்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஜென் சி இளைய சமுகத்தை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது பற்றி விஜய் முதலில் சிந்திக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.