பண திமிரு..ரவுடித்தனமா.!!ஆதவ் அர்ஜுனை விடாமல் அடிக்கும் நக்கீரன் கோபால்!

Published : Nov 07, 2025, 09:33 PM IST
tamilnadu

சுருக்கம்

ஆதவ் அர்ஜூனா பணத்திமிரில் பேசுவதாக நக்கீரன் கோபால் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக சொல்லிதான் விஜய் தனியாக நிற்பதாக அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக ஒருமையில் பேசியிருந்தார். ''விஜய் மக்களை ஒரு கால்நடையாக கூட மதிக்கவில்லை. அவன் செய்தது நரபலி. 41 உயிர்களை கொலை செய்துள்ளான், தமிழ்நாட்டுக்கே விஷம் தான் இந்த விஜய். அவன் கையில் விலங்கை போட்டு கூட்டி வர வேண்டும். செருப்பால் அடிக்க வேண்டும். மூதேவி விஜய் அரசியலுக்கு தகுதியில்லாதவன்'' என்று நக்கீரன் கோபால் கூறியிருந்தார்.

நக்கீரன் கோபால் மீது கடும் விமர்சனம்

இதற்கு பதிலடியாக நேற்று நடந்த தவெக பொதுக்குழுவில் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நக்கீரன் கோபால் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து இருந்தார். ''பெரிய மீசை வைத்த நபர் ஒருவர் நமது தலைவர் விஜய் சட்டையை பிடித்து அடிப்பேன் என்று பேசினார். பத்திரிகையாளர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா..? தைரியம் இருந்தால் தொடு டா பார்க்கலாம். முடிந்தால் எங்கள் தலைவரின் வீட்டிற்குள் சென்று பார்'' என்று ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.

நக்கீரன் கோபால் பதிலடி

இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா பணத்திமிரில் பேசுவதாக நக்கீரன் கோபால் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய நக்கீரன் கோபால், ''ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன நெஞ்சழுத்தம். பணத்திமிரு. மீசை வச்ச ஆளு பேசுறானு வாய் சவடால் வேற. டேய் நான் அப்படி தான் பேசுவேன். பேசத்தான் செய்வேன். மக்களிடம் நீ பதில் சொல்ல வேண்டும்.

பாஜக சொன்னதால் தவெக பொதுக்குழு

'செந்தில் பாலாஜி நீயா ரவுடியா? நாங்க 6 மாசத்துல வந்து ரவுடித்தனம் செய்வோம்' என்று ஆதவ் பேசுகிறான். மக்கள் உங்களை செருப்பால் அடிப்பார்கள். மக்களை இன்னும் சென்று பார்க்கவில்லை. அதற்குள் முதல்வர் திட்டம் போடுகிறார்கள். கரூர் சம்பவத்துக்கு பிறகே பாஜகவின் பிடியில் பாஜக உள்ளது என அனைவரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பாஜக சொல்லித்தான் திமுக, தவெக இடையே நேரடி போட்டி என்று பொதுக்குழுவில் சொல்லி இருக்கிறார்கள்.

சிறுபான்மையின மக்களை நம்ப வைக்க..

அதிமுக, பாஜகவுடன் தவெக கூட்டணி என்று பரவலாக பேச ஆரம்பித்து விட்டதால் சிறுபான்மையினர் ஓட்டுகள் வராது என்று கருதி நான் தனியாகத்தான் நிற்கிறேன் என சிறுபான்மையின மக்களை நம்ப வைப்பதற்காகத்தான் தவெக, திமுக இடையே போட்டி என விஜய்யை சொல்ல வைத்துள்ளது பாஜக. ஆகவே பாஜக, ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் நேற்று தவெக பொதுக்குழு கூடி நான் முதல்வர் வேட்பாளர் என விஜய் கூறியுள்ளார்'' என்று நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!