எடப்பாடிக்கு ஆப்பு ரெடி..? டிடிவி, பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு..? சஸ்பென்ஸ் வைத்த செங்கோட்டையன்

Published : Sep 25, 2025, 09:24 AM IST
Sengottaiyan

சுருக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பலரிடமும் பேசி வருகிறேன். ஆனால் யார் யாரிடம் பேசியுள்ளேன் என்பதை இப்போது வெளியே சொல்ல முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும் என கலகக் குரல் எழுப்பியவர் தான் முன்னாள அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன். ஒருங்கிணைப்பு பணியை பொதுச் செயலாளர் மேற்கொள்ளவில்லை என்றால் அதனை நானே மேற்கொள்வேன் என்று அதிரடி காட்டினார். ஆனால், செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்து பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கியிருந்த செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல முக்கிய நபர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக செங்கோட்டையன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இருந்து கோபிசெட்டிப் பாளையம் திரும்பிய கையோடு செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “என்னை பொறுத்த வரையில் குறிக்கோள் ஒன்றுதான், அந்த குறிக்கோளின் அடிப்படையில் நேற்று யாரையும் சந்திக்க சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள் ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது கூற இயலாது. ஆகவே எல்லோருடைய உள்ளங்களிலும் இருப்பது அதுதான் இன்று வரை நான் சொன்ன செய்திகளை ஆன்ட்டி கமெண்ட்ஸ் என்று சொல்வார்கள் அது யாரிடத்திலும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

எல்லோருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற மணலை இருக்கிறது என்பது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்பு கொண்டார்களா என்பதை சொல்வது சரியாக இருக்காது. யார் பேசினார்கள் யார் பேசவில்லை என்பது இப்போது சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை.. வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றார்”.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!