
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஒரு மூத்த அமைச்சர் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா அவர் இப்படி பேசியது மிகவும் வருத்தமாக உள்ளது. நான் மதிக்கக்கூடிய அமைச்சர் பெரும் மரியாதைக்குரியவர் பொதுவெளியில் நான் பேசுவது வருத்தம் அளிக்கிறது. நான் மக்கள் பிரதிநிதி ஏறக்குறைய நான்கரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். என்னை கேட்டுவிட்டு திறங்கள் என்று நான் சொல்லவில்லை எனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை என்று தான் நான் கேட்கிறேன் அது என் உரிமை.
வரம்பு மீறி பேச மாட்டோம்
நான் பத்திரிகையாளர்களை சந்தித்து அதுபோல் பேசவில்லை. நான் பேசியது யாரோ களவு தனமாக எடுத்து செய்தியாக்கி விட்டார்கள். இது கேட்டதே குற்றம் என்று குற்றச்சாட்டு சொன்னால் இதற்கு என்ன பதில். ஆட்சியாளர் என்பது வேறு ஆட்சியாளர் கீழ் அதிகாரிகள் என்பது வேறு. வரம்பு மீறி பேசி இருந்தால் பரவாயில்லை. நாங்கள் எப்போதும் வரம்பு மீறி பேச மாட்டோம் எங்களுக்கு என்று ஒரு வரையறை உள்ளது.
என்னை குற்றவாளி ஆக்க பார்க்கிறார்கள்
நாங்கள் ரகசியமாக திறப்போம் என்கிறார்கள். எங்களுக்கு இருக்கும் திருமணமே வெறும் சுயமரியாதை மட்டும்தான் அதைக் கூட விட வேண்டுமா? ஆங்கில பத்திரிகையில் இது Mandatory இல்லை என்று சொல்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் உடைத்து பூஜை செய்திருக்கிறார்கள்.நகராட்சி சேர்மன் ஊராட்சி மன்ற உறுப்பினர் இடம் ஏன் சொல்லவில்லை. சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் சொல்லவில்லை. நான் சொன்னதே தவறு என்று என்னை குற்றவாளி ஆக்க பார்க்கிறார்கள். நான்கைந்து ஆண்டுகளாக ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக உள்ளோம்.
ஆட்சி முன்னேறி செல்லும் பொழுது அதிகாரிகள் இவ்வளவு பெரிய தவறை செய்கிறார்கள். அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் நாம் ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டாம். என் வேதனை என் அருமைக்குரிய அண்ணன் நீர்வளத்துறை அமைச்சர் இப்படி பேசியதுதான். எங்களை முதன்மை விருந்தாளியாக உட்கார வையுங்கள் படையல் போடுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. ஒரு தகவல் சொன்னால் எங்கெல்லாம் தண்ணீர் போகிறதோ அந்த கிராம ஊராட்சி தலைவருக்கு நாங்கள் சொல்வோம்.
வரலாற்றை மறைக்க நினைத்தால் எப்படி?
அதிகாரிகள் சேர்ந்து வரலாற்றை மறைக்க நினைத்தால் எப்படி? முதலமைச்சர் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார் நல்லாட்சி நடக்கிறது. ஆட்சிக்கு அதிகாரத்திற்கோ எந்த குந்தகமும் விளைவிக்கக்கூடாது. செய்யும் தவறை நீங்கள் செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவது தான் வேதனையாக உள்ளது. சமூகநீதியை முதலமைச்சர் பார்த்துக் கொள்வார். அதிகாரிகளை அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களை போட்டுக்கொண்டால் அவர்களுக்கு அதை பார்த்துக்கொள்வார்கள். அதிகாரிகள் சொல்வதை சரியாக என்று பார்க்க வேண்டும் அதுதான் என் வேதனை. ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்.
மாவட்ட அமைச்சருக்கே சரியான தகவல் இல்லை
திமுக ஒன்றிய செயலாளர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் நகராட்சி தலைவர் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர் எல்லோரும் பட்டியல் இனத்தவர்கள் எல்லோரையும் ஏன் அழைக்கவில்லை என்று தான் கேட்கிறோம். பட்டியல் இனத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி. ஒன்றிரண்டு அதிகாரிகள் செய்யும் தவறை தான் சுட்டிக் காட்டுகிறோம் அதிகாரிகளால் ஆட்சிக்கு கலங்கம் வந்து விடக்கூடாது என்ற வேதனை தான். துணை முதலமைச்சர் இந்த சிறிய வயதிலும் இரவு பகலாக ஆய்வு செய்து வருகிறார். எங்கள் மாவட்ட அமைச்சருக்கே சரியான தகவல் இல்லை. நான் பத்திரிக்கையில் பேசாதது வெளியில் சென்றது நாகரிக குறைச்சல். அதிகாரிகளைப் பற்றி பேசவே கூடாது கண்டிக்கக் கூடாது என்றால் எப்படி. மக்கள் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாலம் இல்லை என்று சொல்லிவிட்டு செல்லட்டும் என தெரிவித்துள்ளார்.