வடகிழக்கு பருவமழை 31 பேர் உயிரிழப்பு.! ஷாக் தகவலை சொன்ன அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

Published : Oct 25, 2025, 03:23 PM IST
Kolkata Heavy rain and floods news today weather forecast

சுருக்கம்

புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும், பாதிப்புகளைச் சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Bay of Bengal new cyclone status : வங்க கடலில் புதிய புயல் உருவாகியுள்ளதையடுத்து சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதியிலிருந்து துவங்கியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. பேரிடர் வருவாய் துறை கணக்கின்படி 1.10.2025 முதல் 24.10. 2025 வரை மொத்தம் மழையின் அளவு 21.8 சதவீதம் ஆகும். இயல்பாக மழை பெய்யக் கூடிய அளவை விட சற்று கூடுதலாக உள்ளது.

வங்க கடலில் புயல்- எதிர்கொள்ள தயாராகும் தமிழகம்

புயல் தொடக்கத்தில் சென்னையை நோக்கி வருவதாக தகவல் வந்திருந்தது. தற்போது ஆந்திராவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய ஒரு பகுதியாக சென்னை சுற்றி உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் ஏரிகளின் நீர் இருப்பு தற்போது வரை செம்பரம்பாக்கம் ஏரியில் 80.36 சதவீதமும், பூண்டி ஏரியில் 83.53 சதவீதமும், செங்குன்றம் ஏரியில் 81.85 சதவீதமும், சோழவரத்தில் 60.60 சதவீதமும் தண்ணீர் அளவு தற்போது உள்ளது. இந்தப் புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. நெல் கொள்முதல் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.

வடகிழக்கு பருவமழை 31 பேர் உயிரிழப்பு

குறிப்பாக 1.10.2025 முதல் 25.10.25 வரை 31 பொதுமக்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமான 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 23 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காயமடைந்த 47 பேரில் 14 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் இறப்பு எண்ணிக்கை 485 ஆக உள்ளது இதில் 335 கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கோழிகள் பொறுத்த வரையில் 20,425 கோழிகள் உயிரிழந்த நிலையில் அவற்றின் 16574 உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகள் கண்காணிப்பு

இதேபோல் வீடுகள் மற்றும் குடிசைகள் 1760 சேதமடைந்துள்ளதாகவும் அதில் 1460 வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரக்கூடிய நாட்களில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மீதி நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என கூறினார். மேலும் நீர்நிலைகளில் தொடர்ந்து தண்ணீரின் அளவானது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நீர்மட்ட உயர்வு ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!