ஸ்டாலினுக்கு தூக்கமில்லை.. செல்வபெருந்தகை பச்சோந்தி.. OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்.. ரவுண்ட் கட்டும் செல்லூர் ராஜு

Published : Mar 03, 2026, 06:10 PM IST
sellur raju

சுருக்கம்

Sellur Raju: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தல் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் தூக்கமின்றி தவிப்பதாகவும், புதிய திட்டங்களை அறிவிப்பதாகவும் விமர்சித்துள்ளார். என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் பாஸ்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: திமுகவினருக்கு தேர்தல் பயம் வந்து விட்டது. அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பணப்பலன்களை அள்ளி வீசி வருகின்றனர். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி முதல்வருக்கு தோல்வி பயம் வந்ததால் தூக்கம் வராமல் தவித்து வருகின்றார். பொதுமக்களுக்கு இலவச பட்டா தருவதாக கூறிவிட்டு வெறும் பேப்பரை மட்டும் வழங்கி வருகின்றனர். தேர்தல் வருவதால் புதிய சாலைகள் அமைத்து புதிய புதிய திட்டங்களை அறிவிக்கின்றனர். தோல்வி பயம் வந்ததால் தான் கூட்டணி கட்சிகளை கூப்பிட்டு கூப்பிட்டு கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார் முதல்வர் ஸ்டாலின்.

திமுக தில்லு முல்லு கட்சி

திமுக தில்லு முல்லு கட்சி வளர்ச்சிக்கான கட்சி இல்லை. தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், ஒதுக்கப்பட்டவர்கள் . தற்போது திமுகவினர் அழைத்து பல்வேறு பதவிகளை வழங்கி வருகின்றனர். திமுகவில் பல சீனியர்கள் இருந்தும் அவர்களுக்கு பொறுப்பு தராமல் அதிமுகவிலிருந்து சென்றவர்களுக்கு பொறுப்பு தருவது திமுக கட்சியினரிடையே கலக்கத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. என்டிஏ கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெயில் 108 டிகிரி அடித்தும் பொதுமக்கள் மதியம் 1 மணி முதல் மாலைவரை அமர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

செல்வபெருந்தகை ஒரு பச்சோந்தி

என்டிஏ கூட்டணி என்றாலே அது அதிமுக தலைமையிலான ஆட்சி தான். என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் "பாஸ்" என்றார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ஒரு பச்சோந்தி அவர், திமுக, விசிக, காங்கிரஸ் என பல கட்சிக்கு மாறியவர் திமுகவுக்கு விசுவாசி. திமுகவின் ஊதுகுலலாக செல்வபெருந்தகை செயல்படுகிறார். ஓபிஎஸ்-க்கு அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது அவரது எதிர்காலம் முடிந்து விட்டது. அம்மா இருக்கும் போது சட்டசபையில் ஓபிஎஸ் எப்படி பேசினார். தற்போது எப்படி புகழ்ந்து பேசி வருகிறார். இனிமேல் அவருக்கு தோல்விதான். ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ் திமுகவை ஆதரித்து கொண்டு தான் இருந்தார். அதனால் எனக்கும் ஓபிஎஸ்-க்கும் சண்டையே வந்தது. எல்லாத்தையும் சகித்து கொண்டு தான் அவரை கட்சியில் வைத்திருந்தோம்.

கலைஞர் ஆட்சியில் 2G ஊழல்

கலைஞர் ஆட்சியில் 2G ஊழல் செய்த போது பலர் கைதானதால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என கலைஞர் அறிவித்தார். ஆனால் இப்போது கூட்டணியில் தான் உள்ளனர். திமுக தான் காங்கிரசின் அடிமை கட்சி. திமுக காங்கிரஸ் கூட்டணி வைத்தால் நல்ல கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி வைத்தால் அது அடிமை கூட்டணியா என கேள்வி எழுப்பினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
விசுவாசம் ஜெயிக்காது..! மாற்று கட்சிக்கு சென்று பேரம் பேசுபவனுக்கே காலம்.. ஜெ., உதவியாளர் பரபரப்பு பதிவு..!