10ம் வகுப்பு பாஸ் பண்ணாலே போதும்.. மார்ச் 04 முதல் 06 வரை AI வெப் டிசைனிங் பயிற்சி.. விண்ணப்பிப்பது எப்படி?

Published : Feb 27, 2026, 01:26 PM IST
tamilnadu government

சுருக்கம்

Tamilnadu Government: சென்னையில் செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங் என்ற மூன்று நாள் இலவச பயிற்சியை மார்ச் 04 முதல் வழங்குகிறது. இப்பயிற்சியில் வெப் டிசைனிங், AI கருவிகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் மற்றும் சொந்த தொழில் தொடங்க ஆசைப்படுபவர்களுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வழங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் “செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங்”பயிற்சி, வரும் மார்ச் 04 முதல் 06 வரை (3 நாட்கள்) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சி திட்டத்தின் நோக்கு:

• இணையதளம் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது.

• HTML மற்றும் CSS அடிப்படைகள்.

• பதிலளிக்கும் (Responsive) இணைய வடிவமைப்பு கோட்பாடுகள்.

• பயனர் நட்பு இணையதளங்களுக்கான UI/UX அடிப்படைகள்.

• ஹோஸ்டிங் மற்றும் டொமைன் அமைப்பு அறிமுகம்.

நடைமுறை திறன் மேம்பாடு:

• நிலையான (Static) இணையதளங்கள் வடிவமைத்தல்.

• CSS பயன்படுத்தி லேஅவுட் உருவாக்கம்.

• படங்களை சீரமைத்தல் மற்றும் வெப் கிராஃபிக்ஸ் அடிப்படைகள்.

• நேரடி (Live) டெமோ இணையதளம் வெளியிடுதல்.

தர உறுதி பயிற்சி:

• இணையதள வடிவமைப்பு கருவிகள் மற்றும் எடிட்டர்கள்.

• AI உதவியுடன் வெப் டிசைன் கருவிகள்.

• அடிப்படை SEO நட்பு நடைமுறைகள்.

• இணையதள செயல்திறன் பரிசோதனை.

• நிபுணத்துவம் வாய்ந்த தொழில்முறை மற்றும் துறைசார் நிபுணர்களால் வழங்கப்படும்.

வேலை வாய்ப்புகள்:

• தொடக்க நிலை வெப் டிசைனர் பணிகள்.

• ஃப்ரீலான்ஸ் இணையதள மேம்பாட்டு திட்டங்கள்.

• IT நிறுவனங்களில் இன்டர்ஷிப் வாய்ப்புகள்.

தொழில்முனைவு வாய்ப்புகள்:

• ஃப்ரீலான்ஸ் வெப் டிசைன் சேவைகள் தொடங்குதல்.

• சிறு தொழில்களுக்கான இணையதளங்கள் உருவாக்குதல்.

• டிஜிட்டல் சேவை சார்ந்த வணிகங்கள் தொடங்குதல்.

மேலும், மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.tn என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 9360221280 / 8668100181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத திருப்பம் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்.. EPS-க்கு அதிர்ச்சி
திமுகவில் இணைந்த கையோடு ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை! அலறும் இபிஎஸ்! அதிர்ச்சியில் தென் மாவட்ட அதிமுக