எனக்கு இந்தியாதான் பிடிக்கும்: செல்லூர் ராஜு!

எனக்கு இந்தியாதான் பிடிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்


இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக, ஜி20 மாநாட்டையொட்டி, குடியரசுத் தலைவர் ஜி20 தலைவர்களுக்கு இரவு விருந்து அளித்தார். இதற்கான அழைப்பிதழில், பாரத ஜனாதிபதி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக, இதுபோன்ற அழைப்பிதழ்களில் ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தியாவின் பெயரை “பாரத குடியரசு” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

இந்த நிலையில், தனக்கு இந்தியாதான் பிடிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பாரத் பெயர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

புவிசார் அரசியல் பிரச்சினைகள் ஜி20-யை பாதிக்கக் கூடாது: பிரேசில் அதிபர்!

அதற்கு பதிலளித்த அவர், எனக்கு இந்தியா தான் பிடிக்கும் ஆனால் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று தெரிவித்தார். பாரத் என பெயர் மாற்றப்பட்டால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரும் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, “எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக உள்ளதே அது. அவை நடக்கும் போது பார்க்கலாம்.” என்றார்.

முன்னதாக, “பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே, பாரதம் என்று பெயர் வைத்தால் தவறு ஒன்றும் இல்லை.” என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!