அரியலூர் ரவுடி பூச்சி சுதாகர் முன்விரோதம் காரணமாக சைக்கோ பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் அர்ஜுன் ராஜ் ஆகியோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி பூச்சி சுதாகரை மற்றொரு ரவுடி சைக்கோ பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் அர்ஜுன் ராஜ் ஆகியோர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். வீடு தேடிச் சென்று கொன்ற இந்தக் கொடூரச் சம்பவம் அந்த மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமழபாடி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் என்ற பூச்சு சுதாகர் இவர் பிரபல ரவுடி ஆவர். சைக்கோ பாஸ்கர் என்ற மற்றொரு ரவுடியின் அண்ணன் ஜெகதீசனின் மனைவி மீது சுதாகர் ஆசை பட்டிருக்கிறார். ஜெகதீசன் இறந்த பின் அவரது மனைவியை சுதாகர் தன் வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
undefined
இந்த முன் விரோதம் காரணமாக சைக்கோ பாஸ்கர் தனது நண்பர் அர்ஜுன் ராஜ் என்பவருடன் சேர்ந்து சுதாகர் வீட்டு முன்பு நின்று இருந்த இருசக்கர வாகனத்தை கொளுத்தியுள்ளார். வீட்டின் முன்பகுதியையும் தாக்கிச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்த சுதார் வெளியே சத்தம் கேட்பதால், வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அவரைக் கண்டதும் சைக்கோ பாஸ்கரும் அவரது நண்பர் அர்ஜுன் ராஜும் ஆத்திரத்தில் சுதாகரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகள் சைக்கோ பாஸ்கர், அர்ஜுன் ராஜ் ஆகியோரைப் பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் நடந்ததையடுத்து புதுக்கோட்டை கிராமத்தில் பரப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது.