சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை முறையாக அகற்றாத மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழக அளவில் தற்பொழுது மழைக்காலம் துவங்கியுள்ளதால் கொசுக்களால் ஏற்படும் டெங்கு போன்ற பிற வியாதிகளிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மதுரவாயில் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் தெருவை சேர்ந்த ரக்சன் என்ற நான்கு வயது சிறுவன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனை அடுத்து அவனுடைய பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற பொழுது, அந்த சிறுவனுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் அந்த சிறுவனுக்கு டெங்கு இருப்பது தெரியவந்துள்ளது.
சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசி வரும் திமுகவை ஒழிக்கணும்.. அண்ணாமலை ஆவேச பேச்சு..!
இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரக்சன் அனுப்பப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரக்சன் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுவன் ஒருவர் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்..
"சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்ஷன் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்ஷன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும்…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்தியா என்ற பேரை கேட்டாலே அதிருதா.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்