
தேனி
தேனியில் பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலி பீடி தயாரித்த விற்றவரை காவலாளார்கள் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த சையதுமுகமது, திருநெல்வேலியைச் சேர்ந்த தர்மராஜ், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மன் மற்றும் சுரேஷ்.
இவர்கள் நால்வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் பீடி தயாரித்து விற்கின்றனர் என்ற புகாரை அந்த பீடி நிறுவனத்தின் தேனி பகுதி மேலாளர் அற்புதநாதன், பெரியகுளம் காவல்நிலையத்தில் நேற்று அளித்தார்.
அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை தொடங்கினர். பின்னர், பெரியகுளம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின்போது40 போலி பீடி பண்டல்களை காவலாளர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து போலி பீடி தயாரித்து விற்றதாக சையது முகமதுவை காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.