ஓடும் பேருந்தில் டிரைவருக்கு ஹார்ட் அட்டாக்… பஸ்சை ஓரமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் …. இருக்கையிலேயே உயிரிழந்த பரிதாபம்….

By Selvanayagam PFirst Published Sep 11, 2018, 8:23 PM IST
Highlights

சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்ததால் அவசரமா ஓரங்கட்டிய இருக்கையிலேயே உயிரிழந்தார். கடும் நெஞ்சுவலியையும் பொருட்படுத்தாமல் பயணிகளை காப்பாற்றி அவரை பொது மக்கள் மிகுந்த வருத்தத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஏ.கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண சுந்தரரானாந்த் . இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு பஸ் புறப்பட்டது. சேலம் பொன்னம்மாபேட்டை அருகில் சென்றபோது திடீரென்று டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரத்தில் நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தவாறே இறந்துவிட்டார்.



இதுகுறித்து பேருந்து நடத்துனர்  அம்மாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே அங்கு சென்று டிரைவர் கிருஷ்ண சுந்தரரானாந்த் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

ஹார்ட் அட்டாக் வந்தபோதும் கூட பயணிகளை காப்பாற்றும் வகையில் கஷ்டப்பட்டு பேருந்தை எங்கும் மோதவிடாமல் சாமர்த்தியமாக நிறுத்தி அத்தனை பயணிகளையும் காப்பாற்றிய அந்த டிரைவரின் செயலை பாராட்டுகின்றனர்.

இந்நிலையில் டிரைவர் இறந்தது குறித்து  அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ண சுந்தரரானாந்த்துக்கு  மதுகாம்பாள் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
 

click me!