சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வங்கசேத இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சிராப்பள்ளியை பூர்வீகமாகக் கொண்டவர் ஜான் செல்வராஜ். 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காவல் துறையில் வாகன ஓட்டுநராக பணியாற்றினார். பின்னர் 2009 முதல் 2019ம் ஆண்டு வரை பணியில் இருந்து ஒதுங்கி இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் சிங்கப்பூரில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் காவல் துறையில் பணியில் சேர்ந்த ஜான் செல்வராஜ் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு வெடியாக இருக்க வேண்டும் - கனிமொழி கர்ஜனை
தாம்பரம் சரகத்தில் அதிக குற்ற வழக்குகள் பதிவாகும் காவல் நிலையங்களில் சேலையூர் காவல் நிலையமும் ஒன்றாக இருந்துள்ளது. மேலும் ஜான் செல்வராஜ் ஏதேனும் காரணங்களை சொல்லி அடிக்கடி விடுப்பு எடுப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பும் மருத்துவ விடுப்பில் 60 நாட்கள் விடுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Toll Gate Charges: தமிழ்நாட்டில் அதிரடியாக உயரும் சுங்கச்சாவடி கட்டணம்.. அதுவும் எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில் உயர் அதிகாரி ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஜான் செல்வராஜ் கடந்த 19ம் தேதி விடுப்பு எடுத்துவிட்டு சென்றுள்ளார். அப்படி சென்ற நிலையில் அவரிடம் இருந்து உடன் பணியாற்றுபவர்களுக்கு எந்த தகவலும் வரவிலலை. இந்நிலையில், வங்கதேச எல்லையில் ஜான் செல்வராஜை அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் தமிழக காவல் துறையின் அடையாள அட்டை இருந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மாநில காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் குற்றவாளிகளுடன் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாரா, அவருக்கு சர்வதேச சட்டவிரோத கும்பலுடன் பழக்கம் இருக்கிறதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.