கால்நடைகளுக்கு ஓட்டுரிமை வேண்டும்.! ஆடு, மாடு மாநாடு நடத்தி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த சீமான்

Published : Jul 11, 2025, 06:37 AM IST
SEEMAN MEETING

சுருக்கம்

 ஆடு மாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சீமான் மேய்ச்சல் நில உரிமைக்காகக் குரல் கொடுத்தார். வனவிலங்குகளுக்கு நோய் பரப்புவோம், ஆறுகளைக் கலங்கடிப்போம் என்றெல்லாம் கூறுவது கேவலம் என அவர் பேசினார்.

Seeman held a cow and goat conference : மதுரை மாவட்டம் விராதனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆடு மாடுகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். மேடையின் முன்பாக இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நாட்டின மாடுகள் மற்றும் ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதுமட்டுமில்லாமல் எருமை மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள், செம்மறி கடா, உள்ளிட்டவைகளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாநாடு தொடங்கியவுடன் ஆடு மாடுகள் மாநாடு தொடர்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

அப்போது பேசிய சீமான், காட்டுக்குள் ஆடு மாடு நுழையக்கூடாது மேய்ப்பர்கள் கால்வைக்க கூடாது என்றால் அதனை தகர்க்காமல் இருப்பது போன்ற கொடுமை உள்ளதா ? மேய்ச்சல் நிலம் உரிமை என்ற முழக்கத்தோடு ஆடு மாநாடு நடத்தப்படுகிறது. ஆடுமாடுகளின் எண்ணத்தை முன்வைத்து பேசுகிறேன் என சீமான் தெரிவித்தார்.

தமிழகத்தில் மேய்ச்சல் நிலம் எங்கே.?

1.2 லட்சம் மேய்ச்சல் நிலங்கள் தமிழகத்தில் உள்ளது. தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரியில் உள்ளதா சொல்கிறார்கள் ஆனால் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள், வானூர்தி நலையங்கள் அமைக்கீறீர்கள். பால், தயிர், வெண்ணைய் வேண்டும் என கேட்போர்கள் என எங்களுக்கு உணவு இல்லை.  நாங்கள் போஸ்டரையும், நெகிழியை திங்கும் நிலை உள்ளது. சமவெளியில் மேய எங்கு இடம் உள்ளது மலையில் சென்று நாங்கள் மேய்வதில் என்ன பிரச்சனை, நாங்கள் இன்றுதான் மேய தொடங்குகிறோமோ? இப்போது மட்டும் எப்படி தடைபடுகிறது, தண்ணீர் சுனைகள் கலங்கடிக்கிறோம் என்கிறீர்கள் நாங்கள் நீச்சல் போட்டிக்கா செல்கிறோம், மேய்ச்சலுக்கு தடை ஏற்புடையதாக இல்லை

வன விலங்குகளுக்கு நோய் பரப்புவோம் என்கிறார்கள் , நாங்கள் எந்த நோயை பரப்பினோம் ; ஆற்றையும் அருவியையும் பாதுகாப்பவர்களா நீங்கள்; வைகை நதி உருவாகுவதை தடுப்போம் என கூறி மேகமலையில் எங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள், கல்குவாரி என கூறி மலைகளை அழிக்கிறீர்கள். உங்களிடத்தில் கல்குவாரியாக உடைத்து பிரிக்கும் போது அப்போது வனவிலங்குகளை பற்றி கவலைப்படாத நீங்கள், தாயின்மார்பை கறியாக ஆக்கி சாப்பிட நினைக்கிறீர்கள்

ஆடு, மாடுகளால் காட்டு விலங்குகளுக்கு நோய் பரவுகிறதா.?

நாங்கள் மேய்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு வரும் என கூறுவது கேவலம், காடுகளுக்கும் புலி, சிங்கம், யானைக்கு தான் சொந்தமா எங்களுக்கு சொந்தம் இல்லையா? காட்டில் இருந்த என்னை ஏன் வீட்டிற்கு கொண்டுவந்தீர்கள் வெட்கமாக இல்லையா? எங்களை அர்ப்பமாக நினைக்கிறீர்கள்; பள்ளி வகுப்பில் ஒழுங்காக படிக்காவிட்டால் ஆடுமாடு மேயுங்கள் என கூறுவது ஏன் அப்படி எங்களை பார்த்தால் இழிவாக உள்ளது. வாரம் ஆனால் நெஞ்ச எலும்பு கறி கேட்பது, கறி, பால் எங்கிருந்து வரும்; ஆடுமாடு மேய்ப்பது அவமானமா? நாங்கள் யார் உங்களோடு வாழ்வோடு பிரிக்கமுடியாத இணைந்த உயிர்கள் நாங்கள். ஆடுமாடுகள் எங்களுக்கு விழா கொண்டாடியவன் தமிழன் தான்; காரணம் உங்களுக்கு தோளோடு தோள் வைத்து இருந்தோம்; எங்களை ஒதுக்கி வைக்கிறீர்கள்

நெல்லை நீங்கள் எடுத்துவிட்டு எங்களுக்கு வைக்கோல்; அரிசி நீங்கள் எடுத்துவிட்டு எங்களுக்கு தவீடு; நீங்கள் சாப்பிடுவிர்கள் எங்களுக்கு கழுனி தண்ணீரை ஊற்றுவீர்கள்ழ அர்ப்ப மாடுகள் அல்ல நாங்கள் அரிய செல்வங்கள், நாங்கள் இருக்கும்வரை நீங்கள் ரசாயான உரத்திற்கு செல்லமாட்டீர்கள் நாட்டு மாடு இனத்தை அழிக்க ஜல்லிக்கட்டு தடை போட்டார்கள் போராடி மீண்டும் பெற்றோம். தரமற்ற பாலை ஏ1 என ஒன்றென்னனும் தரமான பாலை ஏ2 ரெண்டு என்றீர்கள்; இன்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யவில்லை

நாங்கள் போட்ட குட்டிகள் எங்கள் பாலிலே வளர்ந்தவர்கள் தான்; ஆடுமாடுகளுக்கெல்லாம் பேசுகிறார்கள் என்றால் ஒன்னும் பண்ண முடியாது; மாடென்றால் கேவலமாக போய்விட்டதா? டாக்டர், IAS, IPS ஆகிவிடுவார்கள் சோத்துக்கு என்ன பண்ணுவார்கள் , எந்த திரவ உணவும் முழு உணவு ஆகாது. பால் மட்டும் தான் முழு உணவு , பால் சாப்பிட்டால் மலம் வரும் ஆனால் ஜூஸ் சாப்பிட்டால் வராது. பால் முழு புரதசத்து உள்ள உணவு , பால் என்பது முழு உணவு, பால் இருக்கும் நாடு பசியை சந்திக்காது, இதனை தெரியாமல் படிப்பது ஏன். டாக்டர்கள் பால், முட்டை. கீரை சாப்பிடுங்கள் என்பார் அது எங்கிருந்துவரும், இது புரியாத கூட்டத்திலயே பேசி பயன் என்ன உள்ளது

ஆடு மாடு மேய்ப்பது அரசுப்பணி இல்லையா.?

 நீங்கள் தண்ணீர் குடிக்கிறீர்கள் ஆடுமாடுகள் எங்கே செல்வார்கள்; யானை, புலி எதற்காக ஊருக்குள் வருகிறது. எருமை மாட்டுப்கு ஒரு வருத்தம் எந்த அயோக்கியன் தப்பு பண்ணலும் என் பெயரை சொல்லி ஏன் திட்டுகிறீர்கள. அவ்வளவு கேவலமா போய்விட்டேனா நான். திருமால், சிவன் கருப்பு நிறத்தில் தானே உள்ளனர் அவர்களை உயர்த்தி என்னை ஏன் இழிவுபடுத்துகிறீர்கள். இங்கு மாநாட்டில் ஆடுகள் நிறைய பங்கேற்பதாக இருந்தது மழையால் அவர்களால் வர இயலவில்லை. எந்த விருந்தில் எங்கள் கறி இல்லாமல் எங்கு உள்ளது. எலும்பு இல்லாத சுக்கா பக்காவாக சாப்பிடுகிறீர்கள். ஆடுமாடு அவமானம் என்றால் எதற்காக பால் தயிர் சாப்பிடுகிறீர்கள் ஆடுமாடு மேய்ப்பது அரசு பணி என்றால் சிரிக்கீறிர்களே, சாராயம் ஊத்திகொடுப்பதை அரசு வேலையாக பார்க்கும் நீங்கள், பால் தயிர் இறைச்சி கொடுப்பவர்களை எங்களை மேய்ப்பது இழிவா?

கால்நடைக்கு சிகிச்சை அளிப்பவர்கள் அரசு மருத்துவர்கள். ஆனால் ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா? சாப்டுவேரில் வேலை செய்தாலும் சாப்டுதான் வேலை செய்ய வேண்டும், எங்கு பொருளாதாரம் இருக்கும் என தெரியாத அரசு , காவலர் அடித்து செத்தால் 5 லட்சம் கள்ளசாரயம் குடித்து செத்தால் 10லட்சம் எவ்வளவு கேவலமான அரசு இது. ஆடுமாடுகளுக்கு ஓட்டுரிமை தாருங்கள் நாங்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கிறோம் இது தான் எங்களின் கோரிக்கை

ED ரெய்டு வந்தபோது ஓடிப்போனது நம்மளா? இவர்களா? அவர்கள் கெஞ்சினார்கள் இடையில் நடந்தது என்ன இப்போது சத்தமில்லாமல் இருக்கிறது.,பாஜகவை நுழைய விடமாட்டோம் என இன்னும் நம்ப வைக்கிறார்கள் , பாஜகவை காட்டி ஆண்டாண்டு காலமாக ஏமாற்றிவருகிறார்கள், அதிமுகவோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளை போல பாஜகவும் ஒட்டியிருக்கிறது, ஆனால் பாஜக வந்துரும் கண்ணுக்கு தெரியாத எதிரியை ஊரை கூட்டி சென்ற கதையாக உள்ளது. ஆடுமாடுகளுக்கு ஓட்டுரிமை தாருங்கள் நாங்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கிறோம் இது தான் எங்களின் கோரிக்கை

மாடுகளுக்கு ஓட்டுரிமை

ஆடுமாடு மேய்க்க தடை போட்டால் மேய்ச்சல் நிலங்களை உருவாக்க வேண்டும், தரிசு நிலத்தை மேய்ச்சல் நிலம் என சொல்ல வேண்டும். ஆகஸ்ட் 3 ஆம் தேதி நானே தடையை மீறி தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் மேய்ச்சலுக்கு செல்வேன், எங்கு தடை செய்தார்களோ, எங்கு மேய்க்க சென்றவரை வனக்காவலர் தள்ளினாரோ அதே இடத்தில் மாட்டை ஓட்டி செல்வேன். பசுமாதா நாங்கள் கேட்கிறோம் என கூறி பேசிய சீமான் எங்கள் மூத்திரத்தை குடித்துமா உங்களுக்கு அறிவில்லை என நான் சொல்லவில்லை பசுமாதா சொல்கிறது என்றார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்