பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும்: சீமான்!

By Manikanda PrabuFirst Published Apr 2, 2024, 10:27 AM IST
Highlights

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும் என நாம் தமிழர் கட்சியி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து களம் காண்கிறது.

அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தேனியில் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும் என்றார். பாஜக தன்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினார்கள் என்ற அவர், பாஜகவில் சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், தேர்தலில் போட்டியிட 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும் என்றார்.

மோடி ஜெய்ஹிந்த்புரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினாலும் பாஜக தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க முடியாது- லியோனி

பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் நான் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை எனவும், பாஜக கட்சி அலுவலகமாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மைக் சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தாமதமாக தேர்தல் ஆணையத்தை அணுகியதாகவும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!