பாஜக வடமாநிலத்தில் கடைபிடிக்கும் அரசியல் வெறியாட்டத்தை தமிழகத்திலும் நுழைக்க முயற்சியா..! சீமான் ஆவேசம்

Published : Aug 14, 2022, 03:50 PM IST
பாஜக வடமாநிலத்தில் கடைபிடிக்கும் அரசியல் வெறியாட்டத்தை தமிழகத்திலும் நுழைக்க முயற்சியா..! சீமான் ஆவேசம்

சுருக்கம்

தமிழ்நாடு நிதியமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு

ஜம்மு காஷ்மீரில்  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 3 ராணுவ வீரர்கள்  உயிர் இழந்தனர். இதனையடுத்து இறுதி மரியாதை செலுத்துவதற்காக லட்சமணிண் உடல் நேற்று சொந்த ஊரான மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பாக அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பி.டிஆர் வந்திருந்தார். அந்த சமயத்தில் பாஜகவினர் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது தமிழக அரசு சார்பாக மரியாதை செலுத்திய பின்பு மற்றவர்கள் மரியாதை செலுத்துங்கள் என அமைச்சர் கூறியதாக தகவல் வெளியானது. இதனால் திமுக- பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர் மரியாதை செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது அங்கு நின்றிருந்த பாஜக மகளிர் அணியினர் அமைச்சர் கார் மீது செருப்பை வீசினர். இதன் காரணமாக சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக பாஜகவை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பிடிஆரிடம் காலையில் சவால்.. இரவில் சமாதானம்.. மதுரை சரவணனின் மர்ம முடிச்சு

பாஜக கொச்சைப்படுத்திவிட்டது

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் ஐயா பழனிவேல் தியாகராஜன் அவர்களை குறிவைத்து காலணி வீசியுள்ள பாஜகவினரின் அநாகரிகச்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வட மாநிலங்களில் காலங்காலமாக கடைபிடித்துவரும் வன்முறை அரசியல் வெறியாட்டத்தை தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல நுழைக்க முயலும் பாஜகவினரின் தரம் தாழ்ந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

யார் இந்த டாக்டர் சரவணன்..! எத்தனை கட்சி மாறியுள்ளார் தெரியுமா..? அதிர வைக்கும் பரபரக்கும் தகவல்

இந்திய பெருநாட்டின் ஆகச்சிறந்த தேசப்பக்தர்களாக தங்களுக்கு தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜகவினர், நாட்டிற்காக இன்னுயிர் இழந்த இராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் திட்டமிட்டு வீண்மோதலை தூண்டியிருப்பது வெட்கக்கேடானது. மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சரை வழிமறித்து காலணி வீசியதன் மூலம் நிதியமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் மட்டும் பாஜக அவமதிக்கவில்லை. நாட்டிற்காக உயிர்நீத்த வீரரின் தியாகத்தையும் அற்ப அரசியலுக்காக பாஜக கொச்சைப்படுத்தி விட்டதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்

திமுக உட்கட்சி தேர்தலில் மா.செ உள்ளடி வேலை...? கட்சி மாற தயாராகும் மூத்த நிர்வாகிகள்..! காத்திருக்கும் பாஜக..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை