மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை.. வானிலை அப்டேட்

Published : Aug 14, 2022, 03:05 PM IST
மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை.. வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

14.08.2022 முதல்‌ 15.08.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

16.08.2022 முதல்‌ 18.08.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:பிரியாணி பிரியர்களே உஷார்.. பிரபல ஓட்டலில் வாங்கிய பிரியாணியில் புழு.. தெனாவட்டாக பதில் கூறிய ஊழியர்கள்.!

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

14.08.2022: ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்ககடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பாஜகவினர் நுழைந்தது எப்படி..? அந்த செருப்பு பத்திரமாக இருக்கிறது.. புகைப்படத்தை வெளியிட்டு பிடிஆர் ட்வீட்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்
5 தலைநகரங்கள்.. விவசாயிகளுக்கு அரசு ஊதியம்.. கல்வி, மருத்துவம் இலவசம்.. நாம் தமிழர் தேர்தல் அறிக்கை!