பட்ட பகலில் வங்கியில் நகை கொள்ளை.. திட்டம் போட்டு காய் நகர்த்திய கும்பல்..? காவல்துறை சொன்ன முக்கிய தகவல்

Published : Aug 14, 2022, 01:30 PM IST
பட்ட பகலில் வங்கியில் நகை கொள்ளை.. திட்டம் போட்டு காய் நகர்த்திய கும்பல்..? காவல்துறை சொன்ன முக்கிய தகவல்

சுருக்கம்

அங்கிருந்த கிளை மேலாளர், ஊழியர் ஆகிய இருவரையும் கத்தி காட்டி மிரட்டி, தாக்கியுள்ளது அந்த கும்பல் . மேலும் பாதுகாப்பு பெட்டக அறையின் சாவியை பெற்று, இருவர்களது கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து, கழிப்பறையில் அடைத்துள்ளனர். பின்னர்,  பாதுகாப்பு அறையை திறந்து அங்கிருந்த 16 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பிரதான சாலையில் ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வங்கியில் கிளை மேலாளர் சுரேஷ் மற்றும் ஊழியர் விஜயலெட்சுமி ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். மேலும் காவாளி சரவணன் வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

அப்போது வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் என்பவர் தனது கூட்டாளி இருவருடன் வங்கி வந்துள்ளார். மேலும் காவாளி சரவணனிடம் பேச்சு கொடுத்த அவர்கள், குளிர்பானம் கொடுத்து அருந்த சொல்லியுள்ளார். அதனை குடித்த காவலாளி சரவணன், மயக்க அடைத்துள்ளார். உடனே மயக்கிய சரவணனை, அந்த கும்பல் வங்கிக்குள் இழுத்து வந்து போட்டுள்ளனர்.

மேலும் படிக்க:விரும்பதகாத நிகழ்வில் ஈடுபட்ட பாஜக...! டாக்டர் சரவணன் செய்தது சரிதான்..! ஆர்.பி.உதயகுமார்

பின்னர் அங்கிருந்த கிளை மேலாளர், ஊழியர் ஆகிய இருவரையும் கத்தி காட்டி மிரட்டி, தாக்கியுள்ளது அந்த கும்பல் . மேலும் பாதுகாப்பு பெட்டக அறையின் சாவியை பெற்று, இருவர்களது கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து, கழிப்பறையில் அடைத்துள்ளனர். பின்னர்,  பாதுகாப்பு அறையை திறந்து அங்கிருந்த 16 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

மேலும் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா, சர்வரையும் உடைத்து சேதமடைந்துள்ளனர். கழிப்பறையில் அடைத்திருந்த வங்கி ஊழியர்களை இழுத்து வந்து, பாதுகாப்பு அறையில் தள்ளி பூட்டிவிட்டு, அந்த கும்பல் தப்பியுள்ளது. இந்நிலையில் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாக்கம் காவல்துறையினர், வங்கி ஊழியர்களை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க:சென்னை தனியார் வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளை... அதிர்ச்சி தரும் முதற்கட்ட தகவல்!!
 
சென்னை பெருநகர வடக்கு கூடுதல் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்து, அங்கு விசாரணை நடத்தினர். வங்கியில் வேலை செய்துக் கொண்டிருந்த முருகன் என்பவர் திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரட்டூர் பகுதியில் உள்ள முருகனின் வீட்டிற்கு சென்ற சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.இதனிடையே வங்கி கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை பற்றி தகவல் கொடுக்கும் மக்களுக்கு ரூ 1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. தகவல் அளிக்கும் பொதுமக்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தகவல் கொடுக்கும் காவலர்களுக்கு சன்மானம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை..! காவல்துறை இதயம், ஈரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்றுக் கிடக்கிறது- இபிஎஸ்

PREV
click me!

Recommended Stories

அந்த வார்த்தையை சொல்ல உங்களுக்கு தகுதியே இல்லை ஸ்டாலின்.. திமுகவை விடாமல் இறங்கி அடிக்கும் அன்புமணி!
Tamil News Live today 17 January 2026: BigBoss - கவின் கொடுத்த 'மாஸ்' அப்டேட்.! சாண்டியுடன் இணையும் புதிய படம்.. பிக் பாஸ் வீட்டில் பொங்கிய சினிமா பொங்கல்!