
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு,.புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இரட்டை சிலை முடக்கப்பட்டதால் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இரட்டை மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளுமாறு ஓ.பி.எஸ். அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு மிரட்டல்கள் வந்தன. மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த அணியினர் கூறி வந்தனர். தேனி அருகே ஓபிஎஸ் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதலையும் நடத்தி இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு அளித்தனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுப்படி 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர்.