
ஆர்கே நகர் சட்மன்ற தொகுதியில் இடைத் தேர்தல் 12ம் தேதி நடக்கிறது. இதில் திமுக, அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர்.
தொகுதி முழுவதும் அனைத்து கட்சியினரும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணப்பட்டுப்பாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி பணம், பரிசு பொருட்கள் வழங்கும்போது, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக திமுக, அதிமுக ஓ.பி.எஸ்.அணி, தீபா அணி, பாஜக ஆகிய கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதைதொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா, கடந்த 3 நாட்களுக்கு முன் ஆர்கே நகருக்கு சென்று, ஆய்வு செய்தார். பின்னர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து நாளை தலைமை தேர்தல் அலுவலகத்தில் ஆலோசனை நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.