இறுதிகட்டத்தில் கொடநாடு வழக்கு விசாரணை.! சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரான முக்கிய நபர்

Published : Mar 11, 2025, 02:14 PM IST
இறுதிகட்டத்தில் கொடநாடு வழக்கு விசாரணை.! சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரான முக்கிய நபர்

சுருக்கம்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கோடநாடு இல்ல மர்ம மரணங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்தனர்.

Kodanad estate murder case : மறைந்த முதலமைச்சரும். அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா, கடந்த 2017ஆம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு காலமானார். இதனை தொடர்ந்து அதிமுகவில் மட்டுமல்ல ஜெயலலிதா சொத்து விவகாரங்களில் பலவித குழப்பங்கள் ஏற்பட்டது. குறிப்பாக ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களா, இந்த பங்களாவில் சிலரின் தூண்டுதலின் பேரில் ஆவணங்களை கொள்ளை அடிக்க முற்பட்ட போது அதனை தடுத்த காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சிபிசிஐடி விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்ட நிலையில் விபத்தில் மர்மான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து மர்ம மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை கொள்ளை தொடர்பாக சிறப்பு குழு விசாரணை நடத்திய நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு வழங்கு விசாரணை தொடர்கிறது.

இந்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன் சிக்னல்களும் ஆய்வு செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று   கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.  

விசாரணைக்கு ஆஜரான வீரபெருமாள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின்  முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று ஆஜரானார். அவரிடம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு பல கேள்விகளை கேட்டறிந்துள்ளனர்.

கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு  தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையின் போது கோடநாடு பங்களாவில் கொள்ளையடிக்க கனகராஜ் திட்டம் தீட்டியது உண்மை தானா.? கோடநாடு இல்ல மர்ம மரணங்கள் தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!